Saturday 30 December 2017

அருவி



                    இந்த வருடத்தில் எப்படியும் குறைந்தது இருபத்தைந்து ப்ளாக் எழுதியாக வேண்டும் என்ற எண்ணம். ஆனால் எப்படியெல்லாமோ உருண்டு புரண்டு யோசித்தாலும் அதற்கான கரு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், எக்காரணத்திற்காகவும் அருவி படத்தின் விமர்சனத்தை எழுதக்கூடாது என்றிருந்தும் இப்பொழுது இதைப்பற்றியே எழுதவேண்டிய சூழ்நிலை. படத்தின் முதல் போஸ்டரை பார்த்தபொழுதே எப்படியும் இந்த படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். அதன்பின் இரண்டாம் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் படத்தின் விமர்சனம் என தொடர்ந்து எதிர்பார்ப்பு அதிகரித்தது. கொலைபசியில் இருக்கும்பொழுது தலப்பாகட்டி பிரியாணியை தந்தால் எப்படி இருக்கும் அதே மனநிலையில் இருந்தேன்.


                     படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் தங்க மீன்கள் பார்ட்-2 ஆக இருக்குமோ என்ற பயம் ஆனால் சட்டென்று அடுத்தடுத்த காட்சிகளில் நாயகி வளர்ந்துவிடுவதால் சுமார் இருபது நிமிடக் காட்சிகள் நன்கு ரசிக்க முடிந்தது. அதென்ன வெறும் இருபது நிமிடக் காட்சிகள் ஆம் முதல் இருபது நிமிடங்களுக்குப் பிறகு வேறு ஏதோ படத்திற்க்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணம் சுமார் நாற்பது ஐம்பது நிமிடங்கள் நீள்கிறது. சமூகம், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் சினிமாவின் மீதுள்ள ஆதங்கத்தை கொஞ்சம் காமெடி கொஞ்சம் கோபம் கலந்து தர முயற்சி செய்திருக்கிறார். இதற்கிடையில் மால்களில் படம் பார்ப்பவர்களையும் திட்டி தீர்த்துவிடுகிறார் இயக்குனர்.


                    முதல் முப்பது நிமிடங்கள் ரசிக்கும்படியாகவும் அடுத்த ஜம்பது நிமிடங்கள் சுமாராக இருந்தாலும் படத்தின் மத்த குறைகளை மறக்கசெய்து பார்வையாளர்களின் இரும்பு மனங்களையும் அழவைக்கிறது அந்த கடைசி இருபது நிமிடக் காட்சிகள். ஆம் இதுவரை திரைப்படங்களில் வந்த காட்சிக்காக  இப்படி அழுததில்லை. ஆனால் ஏனோ இந்த அருவி அழவைத்துவிட்டால், என்னை மட்டுமல்ல பார்வையாளர்களில் 95 சதவீதம் கண் துடைத்துக்கொண்டு தான் இருந்தார்கள். உறவுகளோ, தெரிந்தவர்களோ இல்லை நண்பர்களோ ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருந்தால் கண்டிப்பாக இந்த இருபது நிமிடக் காட்சிகள் ஒருவிதமான வலியை உணர்த்தும். பணம், புகழ், பலம் இதையெல்லாம் படைத்த ஆளுமை ஏதோ ஒரு வியாதியால் விழுந்தால் அடியோடு தூக்கி வீசப்படுவான் என்பதை உணர்த்துகிறது இந்த படம். எத்தனையோ மேடுபள்ளங்களை கடந்து கடலில் சேரும் அருவியைப் போல சில குறைநிறைகளை கடந்து சினிமா ரசிகர்களின் மனதில் கலந்துவிடுகிறாள் இந்த "அருவி".

Friday 24 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று



   சதுரங்க வேட்டை என்ற அற்புதமான படைப்பை தந்தமையால் தன் இரண்டாவது படத்தின் தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர் வினோத். சதுரங்க வேட்டையை மிஞ்சும் அளவிற்கு இந்த தீரன் இருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை ஆனால் நிச்சயமாக ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய படம். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தீரன் இந்த மூன்று படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற படங்களை தவிர்த்துவிட்டால் கார்த்தியை தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். விசாரணை படத்தின் மூலம் போலிஸ்களின் மீதிருந்த பெரும் கோபம் இந்த படத்தால் சற்றுக் குறைந்துள்ளது அதுவும் 2005 காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் மீது மட்டுமே. இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் மிக குறைவுதான். தமிழ் சினிமாவிற்கு மட்டுமேயான ஒருசில வரைமுறைகளில் இந்த காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் ஒன்று. எப்படிப்பட்ட சீரியஸ் படமாக இருந்தாலும் அதில் கொத்தமல்லியாக இந்த காதல் காட்சிகளை திணிப்பது. இந்த படத்திலும் கொத்தமல்லியை தூவியிருக்கிறார்கள். படம் ஆரம்பித்து முதல் இருபது நிமிடங்களை மட்டும் மறந்துவிடலாம் ஏனேன்றால் கதைக்கும் இந்த இருபது நிமிடக் காட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை (இரண்டே இரண்டு காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது அதுவும் ராகுல் ப்ரீத் சிங்கிற்காக).


எல்லா இயக்குனர்களும் உண்மை சம்பவங்களை எல்லோருக்கும் பிடித்தார்ப்போல் எடுப்பதில்லை. இந்த விசயத்தில் இயக்குனர் வினோத்தை கோடம்பாக்கம் கைவிடக் கூடாத முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவது நல்லது. தீரன் என்ற போலிஸ் பாத்திரத்தை இவ்வளவு நேர்த்தியாக வேறு இயக்குனர்கள் யாரும் தரமுடியாத அளவிற்கு தரமாக கொடுத்திருக்கிறார். மற்ற இயக்குனர்கள் தனது போலிஸ் படைப்பை இரண்டாம் அல்லது மூன்றாம் பாகம் எடுப்பதற்க்குள் தீரனை குறைந்தது மூன்று முறையாவது பார்த்துவிட்டு படப்பிடிப்பை தொடங்கலாம். காதல், காமெடி என ஒரு முப்பது நிமிடக் காட்சிகளை குறைத்திருந்தால் கண்டிப்பாக தீரன் தமிழ்சினிமாவில் குறைந்தது ஐந்தாறு வருடங்களுக்கு பேசப்பட்டிருக்கும். இப்படியான ஒரு சில விதமான குறைகள் இருந்தாலும் அதை தூக்கியெறிந்துவிடுகிறது அந்த ஏழு காட்சிகள். திகிலும் சிலிர்ப்பும் கலந்து என்னை மிரட்டிய அந்த ஏழு காட்சிகள்.

1. போலிஸ் செலக்சன் காட்சிகள் (காட்சிகளில் இயக்குனரின் கடின உழைப்பை படம் பிடிக்கிறது நம் கண்கள்).
2. குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களை தீரன் மருத்துவமனையில் பார்க்கும் காட்சி (அதிலும் அந்த குழந்தையின் நடிப்பு அபாரம்).
3. இடைவேளைக் காட்சி.
4. கைரேகையை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் காட்சி (அந்த கைரேகையை தேடும் மனிதரின் நடிப்பை அவ்வளவு யதார்த்தமாக தந்திருக்கிறார் இயக்குனர்).
5.குற்றவாளியை பிடிக்க செல்லும்பொழுது ஊரே திரண்டு போலிஸ்களை தெறிக்கவிடும் காட்சி.
6.பேருந்தில் வரும் சண்டைக்காட்சி.
7.படத்தின் இறுதிக்காட்சி.


இதுபோன்ற காட்சிகள் படத்தின் மற்ற குறைகளை சமன்செய்துவிடுகிறது.


-பாஸ்கி.


Monday 2 October 2017

ஸ்பைடர் (Spyder)



                    தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ளது ஸ்பைடர். இந்த படத்திற்க்கு ஏன் ஒன்றரை வருடங்களை வீணடித்தார்கள் என தெரியவில்லை. படத்தில் எந்த இடத்திலும் வலுவான காட்சியை பார்க்க முடியவில்லை. இத்தகைய சாதாரண கதைக்கு திரைக்கதை எழுதி இரண்டரை மணி நேரம் படத்தை தரமுடியுமேயானல் கண்டிப்பாக முருகதாஸ்க்கு நிகர் அவரே. இவரின் மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் மிக தூரத்தில் நிற்கிறது இந்த ஸ்பைடர். படமே லாஜிக் இல்லாமல் இருப்பதால் படத்தில் லாஜிக், ஹிரோயிஸம், ரோமான்ஸ் மற்றும் காமெடி இதில் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தாலும்  கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும். முதல் முப்பது நிமிட படம் ரசிகர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் அதை தாண்டிவிட்டால் போதும் சுடலை(எஸ்.ஜே.சூர்யா)யின் வில்லனிசம் படத்தினுள் இழுத்துவிடுகிறது. சூர்யாவின் வில்லன் பாத்திரத்தை மட்டும் அழகாக தந்திருக்கிறார் ஏ.ஆர்.எம். ஹீரோ உடனான காட்சியிலும், கொலை செய்துவிட்டு உறவினர்களின் அழுகையை ரசிக்கும் காட்சியிலும் பின்னியிருக்கிறார் சூர்யா. மற்ற வில்லன்களைப் போல ஹீரோயினை கடத்தி சென்று ஐ லவ் யூ சொல்ல வைப்பதும், ஹீரோவையும் அவரது குடும்பத்தையும் பழிக்கு பழி வாங்குவதெல்லாம் இல்லாமல் இவரின் புதுமையான வில்லனிசத்தை இரண்டு மூன்று வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் காட்டினால் ரசித்துத் தீர்த்துவிடலாம்.


ரசித்தவை:

படத்தில் ரசித்தவை சில காட்சிகள் தான் அதிலும் சூர்யாவின் புதுமையான வில்லன் பாத்திரம் என்பதால் மட்டுமே.

1. சுடலையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடித்த சிறுவனின் நடிப்பு. கொலை செய்து சடலத்தைச் சுற்றி உறவினர்கள் அழுவதை ரசிக்கும் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம். ரசிகர்களை மிரள செய்கிறது.

2. இடைவேளைக்கு முன் எஸ்.ஜே.சூர்யா அழுபவர்களை பார்த்து ரசிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து தன் தம்பி சாவதைப் பார்த்து அழுது கண்ணீரை ஊதூம் காட்சியும் அப்லாஸ் ரகம்.

3. இரும்புக் கம்பியால் மகேஷ்பாபு பைக் சக்கரத்தை தாக்கும் காட்சி மற்றும் மருதமலை மாமணியே பாடல் பிண்ணனியோடு பெண்கள் உதவியால் சூர்யாவை பிடிக்கும் காட்சி எல்லாம் ரசிக்கும் ரகம்.

வெறுத்தவை:

மேலே குறிப்பிட்ட காட்சிகளை தவிர மத்தவையெல்லாமே வெறுக்கும் ரகம். குறிப்பாக காதல் காட்சிகளும், மகேஷ் பாபுவின் முகபாவனைகளும் சொதப்பல்களின் உச்சம்.


                    தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக எஸ்.ஜே.சூர்யாவிற்காக ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

- பாஸ்கி.

Monday 21 August 2017

தரமணி



            பொதுவாகவே இயக்குனர் ராமின் படைப்புகளில் காட்சித் திணிப்பு மற்றும் ஒரு மன சமநிலையற்ற பாத்திரங்கள் இருக்கும் என தெரிந்தும் அந்த படைப்புகளை முழு மனதோடு எந்தவித வெறுப்பும் இல்லாமல் ரசிக்கும் ரசிகன் நான். 2007ல் கற்றது தமிழ் படத்தை கல்லூரி காலம் என்பதால் விடுதி நண்பர்களை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய குழுக்களாக சென்று பார்த்தோம் அதில் இருபதில் 90 சதவித நண்பர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த அதை மிகவும் ரசித்த 10 சதவிதத்தில் நானும் என் நண்பனும் தான். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னை ஒரு வாரம் வச்சு செய்த கதையெல்லாம் உண்டு ஆனால் நானும் என் நண்பனும் அதை பெரிய பொறுட்டாக கொள்ளாமல் கற்றது தமிழ் நாங்கள் ரசிப்பதற்கான படைப்பு என்றே எடுத்துக் கொண்டோம். இதே படத்தை இன்றோ உலக சினிமாக்களின் வரிசையில் கொண்டாடுவதை பார்க்கையில் வசைப்பாடிய நண்பர்களை நினைத்து சிறு புன்னகையோடு நகர்ந்து விடுவதுண்டு.


           தரமணியை கற்றது தமிழ் போன்று பத்து வருடங்கள் கழித்து கொண்டாடி விடுவார்களோ என்ற அதீத பயம் இருந்தது ஆனால் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. சந்து, பொந்துகளையும் விட்டுவிடாமல் தரமணியை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். நானும் முதல் நாளே ரசிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தாலும் பெங்களூரில் ஒரு வாரம் கழித்தே திரையிடப்பட்டது. நான் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிக்கும் இயக்குனர்களான பாலசந்தர், பாலு மகேந்திரா, பாலா மற்றும் செல்வராகவன் இதில் பாலா பாணியில் நாயகனையும் செல்வராகவன் பாணியில் நாயகியையும் ஒரு சேர இந்த தரமணியில் ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனா் ராம். சென்னையையும், சமுகத்தையும் தன் குரலில் வசைப்பாடுவதில் ஆரம்பித்து ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், அஞ்சலி, வசந்த் ரவி என விட்டுவிடமால் கமிஷ்னர் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரங்களையும் அட்டகாசமாக தந்திருக்கிறார் ராம். எல்லோரையும் போன்று படத்தை ரசித்துவிட்டு பெண்ணியம் பற்றிய பதிவுகள் மற்றும் சமுக நல பதிவுகள் என்று பதிவிட்டு வறிந்து கட்டிக்கொள்ளாமல், இருக்கும் இடம் தெரியாமல் படத்தை ரசித்துவிட்டு சின்னதாக ஒரு விமர்சனத்தை பதிவிடுவதே எழுத்தின் எதிர்காலத்திற்கு நல்லதென தோன்றுகிறது. ஒவ்வொரும் அவர்களின் பங்கிற்கு கருத்துகளையும், வசனங்களையும் பதிவிடுகிறேன் என்ற எண்ணத்தில் படத்தின் மொத்த கதையையும் வசனங்களையும் உளறி வைத்திருப்பர் என்பதை மனதில் கொண்டு தரமணியை கண்டிப்பாக அடல்ட் மட்டும் இப்போதைக்கு ரசிப்பது நல்லது என்பதை கூறிக்கொள்கிறேன் அடல்ட் இல்லையென்றால் பொறுத்திருந்து சில வருடங்கள் கழித்து பார்க்கலாம் எப்படியும் அதற்குள் சமுகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

Saturday 12 August 2017

டைம் டூ டிராவல் - மசினகுடி



மசினகுடி:
                      மேற்கு தொடர்ச்சி மலையில் ஊட்டியின் அருகில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான மலைபகுதியாகவும், மனிதர்களால் சீ்ர்குலையாத (மற்ற சுற்றுலா தலங்களைப் போல் இதை இன்னும் மரணகுழியில் தள்ளவில்லை) இடமாகவும் உள்ளது இந்த மசினகுடி. ஊட்டி, கொடைக்கானல், மூணாறு என விடுமுறை நாட்களில் அதிகம் செலவு செய்தும் மக்கள் கூட்டத்தில் வேகுவதைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவாக இயற்கையையும், வன விலங்குகளையும் ரசிக்கக் கூடிய இடமாக கண்டிப்பாக இது இருக்கும்.
நீங்கள் இயற்கை விரும்பியோ இல்லை விலங்குகள் விரும்பியோ எப்படி இருப்பினும் இரண்டும் உங்கள் கண்களுக்கு மாறிமாறி விருந்தளிப்பது நிச்சயம். ஊட்டிக்கு அருகில் இருந்தாலும் மற்ற சுற்றுலா தளங்களை புறக்கணித்து மசினகுடியை மட்டுமே ரசிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்வது நன்று. ஊட்டியிலிருந்தோ இல்லை பந்திப்பூர் வழியாகவோ செல்வதென்றால் சரியாக காலை 6 மணி இல்லை மாலை 5 மணிக்கு புறப்பட்டால் வழியில் யானை, காட்டெருமை, மான், மயில், கரடி போன்ற விலங்குகளை அரிதாக காண முடியும் லக் இருந்தால் சிறுத்தையும், புலியும் புலப்படும்.

மசினகுடியில் முக்கியமாக மோயாறு பள்ளதாக்கு, சிறுகூர் அருவி அதைத்சுற்றி முதுமலை, பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் கோபாலசுவாமி மலை போன்ற இடங்களை தவிர்க்க வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் காட்டிற்க்குள் அழைத்து செல்கிறோம் என காசை கறந்துவிடும் ஆசாமிகள் அதிகம் எனவே, பந்திப்பூர் மற்றும் முதுமலையை தவிர்த்து வனவிலங்குகளை ரசிக்கவேண்டும் எனில் இருநூறு, முன்னூறு ரூபாய் கொடுத்து சவாரி செய்வதை விட மசினகுடியிலிருந்து பந்திப்பூர் வழியாக பத்து கி.மீ சொந்த வாகனத்தில் பயணம் செய்தால் நிச்சயம் புதுவித அனுபவத்திற்க்கும், த்ரில் பயணத்திற்க்கும் கியாரண்டி.



சிறந்த வழித்தடம்:

பெங்களூர்-மைசூர்-பந்திபூர்-மசினகுடி

மேட்டுபாளையம்-ஊட்டி-மசினகுடி என இரண்டு வழிகள் உள்ளன.

இதில் பெங்களூர் வழியாக சென்றால் ஹைவே என்பதால் பயணத்தில் சிரமமிருக்காது ஆனால் மேல் கம்மனஹல்லியில் ஆரம்பித்து மசினகுடி வரை வெறும் இருபது கி.மீ மட்டுமே காட்டிற்குள் பயணம் செய்ய இயலும் ஆனால் விலங்குகளை இந்த பாதையில் மட்டுமே காண இயலும்.

இதுவே ஊட்டி வழியாக சென்றால் மேட்டுபாளையம் முதல் மசினகுடி வரை சுமார் என்பது கி.மீ மலைகளோடும் இயற்கையோடும் ஒருசேற பயணிக்க முடியும். ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கூடலூர் மற்றும் கள்ளட்டி என இரண்டு வழியாக செல்லலாம். இதில் கள்ளட்டி வழியே என்றால் 36 மோசமான வளைவுகளை கடக்க வேண்டியிருக்கும். பத்து இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்களில் செல்பவர்கள் இந்த பாதையை தவிர்ப்பது நல்லது. கள்ளட்டி வழியாக சென்றால் வழியில் கள்ளட்டி அருவி, பைசான் பாய்ண்ட் எனும் இரண்டு அற்புதமான இடங்களை ரசிக்கலாம்.



தங்கும் வசதி மற்றும் உணவு:

சாதாரண ஹோட்டல்களில் தங்குவதற்கு சுமார் ரூ.300 லிருந்தும், இதுவே காட்டிற்க்குள் உள்ள அறைகளிலும், மரக்கிளைகளில் கட்டபட்டுள்ள வீடுகளில் தங்கவேண்டும் எனில் 2000லிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பீக்காக் டார்மிட்டரி, தெப்பகாடு டார்மிட்டரி எனும் தங்கும் அறைகள் குறைந்த விலையில் கிடைக்கும் தேவையெனில் சமையல்காரா்களும் குறைந்த விலைக்கு சமைத்து தருகிறார்கள்.

விடுமுறை நாட்களை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் குறைந்த பட்ஜெட்டில் கொண்டாடி குதுகலிக்க சிறந்த இடங்களில் ஒன்று இந்த மசினகுடி.

-பாஸ்கி.

Monday 24 July 2017

விக்ரம் - வேதா

               

                   தமிழ் சினிமா, சென்ற வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகச் சிறந்த படங்களை இந்த வருடத்தின் முதல் பாதியிலேயே தந்துவி்டடது. கடந்த ஒரு மாதம் எந்த நல்ல படமும் இல்லை என்ற குறையை விக்ரம் வேதா படத்தின் மூலம் தீர்த்துக்கொண்டார்கள் சினிமா ரசிகர்கள். நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இரண்டு மூன்று முறை பாா்த்து அவர்களுக்குள் ஆத்ம திருப்தியை அடைந்துள்ளார்கள். நிச்சயமாக இந்த படத்திற்க்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஒருபக்கம் என்றால் புஷ்கர் அண்ட் காயத்ரி மறுபக்கம். இதில் மாதவன் அண்ட் விஜய் சேதுபதி கூட்டணி கண்டிப்பாக கண்களுக்கு விருந்தளிக்கும் என்றிருந்தாலும் தோல்வியை ருசித்த இயக்குனர்கள் சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு தன் புதிய அவதாரத்தை தந்திருப்பார்களோ என்ற எதிா்பார்ப்பே அதிகமிருந்தது. இதே எதிர்பாா்ப்புடன் படத்திற்க்குள் நுழைய படம் ஆரம்பித்த அடுத்த நொடியில் சட்டென்று இருக்கையை கச்சிதமாக பற்றிக்கொண்டேன்.


பழைய விக்ரமாதித்தன் வேதாளம் என ஆரம்பித்து அந்த சின்ன கதையின் முடிவில் நான் ஒரு கதை சொல்லவா என படத்திற்குள் அழைத்து செல்கிறது வேதாளம். படத்தின் ஆரம்ப காட்சிகளே சொல்லிவிடுகிறது இன்றைய தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருக்குமென்று. ஆரம்பத்திலிருந்து சுமார் முப்பது நிமிட காட்சிகள் மாதவன் கைவசமிருந்தாலும் சற்றும் தோய்வில்லாமல் கத்தி முனையைப் போன்று அவ்வளவு கூர்மையாக நகர்கிறது திரைக்கதை இருந்தும் இன்னும் மெறுக்கேற்றும் விதமாக பெரிய ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் முழ்க வைக்கிறது விஜய் சேதுபதியின் ஆரம்ப காட்சி. வி.சேயின் ஆர்மபக் காட்சியையும், அதன் பின்னணி இசையையும் ரசிக்காதவர்கள் இருந்தால் அவர்கள் சினிமாவை ரசிக்க தெரியாதவர்களாக இருக்கவேண்டும். விஜய் சேதுபதிக்கே உரிய நடை, உடை, பாவனை மற்றும் நக்கல் கலந்த வசன உச்சரிப்புகள் என அனைத்தும் அப்ளாஸ் ரகம். இறுதிச்சுற்றில் ரசித்ததைக் காட்டிலும் ஒருபடி கீழே என்றாலும் விக்ரம் பாத்திரத்தில் கச்சிதமாக நிற்கிறார் மாதவன். ஷ்ராத ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் படத்தின் முக்கிய பாத்திரமாக விளங்குகிறார்கள். ஷ்ராத ஸ்ரீநாத், கோஹிநூர் என்னும் மலையாள படத்தில் தான் அறிமுகம் பிறகு யு டர்ன் என்ற கன்னட படத்தின் மூலமாக பிலிம் பேருடன் இன்னும் சில விருதுகளை குவித்திருக்கிறார் அம்மணி. கேக்கின் மேல் தடவிய க்ரீமைப் போல வழவழப்பாக உள்ள இவரை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறது திரைக்கதை அதுவே படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் இல்லையென்றால் இவரை ரசித்து திரைக்கதையை கோட்டை விட்டிருக்க வேண்டும். இயக்குனர்களின் முந்தைய படங்கள் நினைவில் வராமல் போவது பெரும் ஆச்சரியம். அந்த தோல்வியை பக்குவமாக எடுத்துக் கொண்டு அதற்கு பரிகாரமாக ஒரு சிறந்த படைப்பை அளித்திருக்கிறார்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி.
விக்ரம்-வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

- பாஸ்கி.

Friday 14 July 2017

இசையிலும் திணிக்கப்படும் இந்தி

                   

                    A.R.ரஹ்மான் அவர்கள் இங்கிலாந்தில் நிகழ்ச்சி ஓன்றில் அதிகம் தமிழ் பாடல்களை பாடியதால் வடஇந்தியர்கள் வெளியேறினார்கள் என்னும் செய்தி வெறும் செய்தியாக மட்டும் இல்லை இது மொழி வெறியாகதான் இருக்க முடியும் எனத் தோன்றுகிறது. இசையை மட்டும் ரசிக்க வேண்டிய இடத்தில் மொழியை மட்டுமே ரசித்திருக்கிறார்கள். புரியாத மொழியின் பாடல்களுக்காக இவர்கள் நிகழ்ச்சியை வெறுத்தாா்களா என்றால் நிச்சயம் வாய்ப்பில்லை அங்கு இந்தி அல்லாதவர்களின் வளர்ச்சியை தான் வெறுத்திருக்க வேண்டும். பெங்களூரில் பிரபலமான கிளப் ஒன்றில் வார இறுதி நாட்களில் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவின் எல்லாவித ஜீவிகளும் கூடுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் மூழ்குவதும் வழக்கம். நெருங்கிய நண்பரோடு நானும் ஒருமுறை கிளப்பிற்க்கு சென்றிருக்க நிகழ்ச்சியில் ஆர்கெஸ்ட்ரா ஆரம்பித்த அடுத்த நொடியில் எந்த மொழி பாட்டை முதலில் பாடுவதென திகைத்திருந்த சமயம் இந்தி பாட்டை பாட வேண்டும் என மெஜரிட்டியை காண்பித்தார்கள் வட இந்திஸ் மற்றவர்களும் விட்டுகொடுக்க இனிதே ஆரம்பமானது நிகழ்ச்சி இந்திவாலா இல்லாதோரும் புரியவில்லை என்றாலும் இசையை ரசித்துக் கொண்டிருந்தோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து தென்னிந்திய பாடல்களை பாட ஆரம்பித்தும் இந்திவாலாக்கள் எழுந்து வெளியே போக ஆரம்பித்தாா்கள் ஏன் என்றதும் எப்படியும் எங்களுக்கு புரியப்போவதில்லை எனவே வெளியேறுகிறோம் என்றாா்கள். அப்பொழுதும் இதைப் போலவே அங்கிருந்த தென்னிந்தியர்கள் கொதித்துப் போனார்கள். இத்தகைய கீழ்த்தரமான செயல்களை சொந்த நாட்டில் செய்வதையே பொறுத்துக் கொள்ள முடியாது இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் அங்கு நடைப்பெற்ற நிகழ்ச்சியின் பெயரே நேற்று இன்று நாளை என தமிழில் வைக்கப்பட்டது தெரிந்தும் இவர்கள் எப்படி இந்தி பாடல்களை எதிர்பாா்த்தார்கள் என்பதுதான்.

                  பொதுவாக டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரிய நகரங்களில் சொந்த தொழில் செய்பவர்களாகட்டும் இல்லை மத்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகட்டும் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் ஆனால் சென்னை மற்றும் பெங்களுரில் அப்படியல்ல அனைத்து மாநில ஜந்துக்களும் புழங்கும் நகரங்கள் இவை அதிலும் வட இந்தியர்கள் மற்ற தென்னிந்திய நகர மக்களைக் காட்டிலும் சற்று அதிகம் காணப்படுகிறாா்கள். இவர்களின் இனவளர்ச்சி ஒரு புறம் பெருகிக் கொண்டிருக்க மற்ற எல்லாத் துறைகளிலும் முக்கியமாக தென்னிந்தியாவில் இவர்களின் தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டும் என்பதே வட(இந்தி)யர்கள் திட்டம். மற்ற தென்னிந்திய நகரங்களில் ஐடி நிறுவனங்களின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் பெங்களூரில் இதன் ஆதிக்கம் அதிகம். இதில் வேலை செய்பவர்களில் 70 சதவிகிதம் இந்திவாலாக்களே இத்தகைய மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு இவர்கள் போடும் ஆட்டத்தை பார்க்கையில் இரத்த கொதிப்புதான் மிஞ்சும். தென்னிந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள்) மீது அவர்கள் வீசும் பார்வைகள் ஒரு விதமான வெறுப்பை அளிக்கும். இதுமட்டுமல்ல இந்திவாலாக்கள் லீட் ஆகவோ இல்லை மேனேஜராகவோ அமைந்துவிட்டால் அதோகதிதான்(சிலர் மட்டும் தப்பிதவறி நல்லவர்களாக இருப்பதுண்டு). இத்தகைய வெறுப்புகளோடு தான் பயணிக்க வேண்டுமென்பது நம் தலைவிதியாய் உள்ளது.

தமிழ் பாடல்கள் மட்டுமல்லாமல் ஏதேச்சையாக தமிழ் வார்த்தைகளை கேட்டாலே ஏதோ குற்ற உணர்விற்கு தள்ளப்படும் ஜடங்கள் நம்மை இந்தி கற்க வேண்டுவது எந்த வகையில் நியாயப்படுத்துவதென்று விளங்கவில்லை. இந்தி தெரிந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைமை என்றும் வரப்போவதில்லை என்பதை இந்திவாலாக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

- பாஸ்கி.

Thursday 22 June 2017

தளபதிக்கு வாழ்த்துக்கள்



                  இளைய தளபதி இன்று தளபதியாய்.., இன்னும் அடைமொழியில் இளைய என்ற வார்த்தைக்கு இடம் இருக்கபோவதில்லை என்றுதான் தோன்றுகிறது. தெறிக்கு பிறகு அட்லியுடனும், அழகிய தமிழ் மகனக்கு பிறகு ரஹமான் கூட்டணியுடன் வரவிருக்கும் மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தளபதியின் பிறந்த நாள் பரிசாக வெளியாகின. இந்த முதல் பார்வை போஸ்டர் சந்தேகமில்லாமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் பெரும் எதிர்பாா்ப்பை தந்திருக்கிறது. மற்றவர்கள் எப்படி வேண்டுமென்றாலும் ரசிக்கலாம் ஆனால் நான் ரசிப்பவை மற்றவர்களை விட சற்று வித்தயாசமானவை ஆக இருக்ககூடும். எல்லோருக்கும் ஒவ்வொரு புது படத்தின் முதல் பார்வை போஸ்டரின் எதிர்பார்ப்பு சில கோணங்களில் இருக்கும் ஆனால் நான் எதிர்பாா்க்கும் ஒரே விஷயம் அதே கண்கள் தான். எல்லா படத்தின் முதல் பார்வை போஸ்டரிலும் கண்களை மட்டும் ரசிப்பவன். மற்றவர்கள் எத்தனையோ விஷயங்களை தளபதியிடம் ரசிக்கலாம் ஆனால் நான் ரசிக்கும் விஷயம் திரைக்கு முன்னால் நடனம், ஆக்சன் மற்றும் நகைச்சுவை அதே திரைக்கு பின்னால் அமைதியும், அவமானங்களை எதிர்கொள்ளும் திறமைகளையும் தான்.


                     சிறுவயதில் அஜித், விஜய் என நண்பர்களிடம் சண்டையிட்ட காலங்களில் அவ்வளவாக இல்லாத ஈர்ப்பு குஷியில் ஆரம்பித்தது இந்த தளபதியின் ரசிகனாய் எனது பயணம். சிலருக்கு சிலர் தலைவர்கள் அப்படிதான் நான் ரசிக்கும் தலைவனாய் தளபதி. ஆக்ஷன் ஹீரோவாக மாறிய காலகட்டம் முன்னால் ரோமான்டிக் ஹீரோவிற்கு ரசிகன், ரசிகையாய் இருந்தவர்கள் கொஞ்சம் மாற்றத்தை ஏற்க முடியாமல் தத்தளித்தார்கள் ஆனால் இன்னபிற ரசிகர்களோ ஆக்ஷனை ரசிக்க ஆரம்பி்த்தார்கள். ஒன்றை தொலைத்தே இன்னொன்றை பெறமுடியும் அல்லவா அப்படிதான் இதுவும். கட்அவுட், பாலபிஷேகம் போன்ற தீவிரத்தை செய்யாத அளவிற்க்கு இந்த ரசிகனின் பயணம் தொடரும்.  

தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



- பாஸ்கி.

Monday 19 June 2017

மரகத நாணயம்



அன்பு உள்ளங்களுக்கு,

                    இந்த வாரம் வெளியான படங்களில் இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று பேசப்பட்ட பீச்சாங்கை படத்தை பார்க்க வேண்டுமென ஆர்வத்தில் இருந்தேன். வலைதளங்களில் தோழர்கள், தோழிகளின் கூச்சல் இல்லையில்லை அவர்களின் விமர்சனங்கள் என்னை மரகத நாணயம் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. கோலிவுட் இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஆவி கதைகளை கைவிடப்போவதில்லை என்பது உறுதி. படத்தின் ஆரம்பமே அசத்தல் (டைட்டில் கார்டில் வரும் பழங்கால கதை), ஆம் ஆரம்பம் அசத்தல் தான் அதற்கு பின் வரும் முப்பது நிமிட கதை சாட்சாத் தமிழ் சினிமாவில் வரும் பாரம்பரியமிக்க அதே காதல் காட்சி தான். 132 பேரை கொன்ற மரகத நாணயத்தை எடுக்க ஊரே நடுங்கினாலும் நம்ம ஹீரோ தைரியமாக களமிறங்குவதே கதை. இத்தகைய கதைகளத்தை தமிழ் சினிமா முப்பது நாற்பதுகளிலேயே ஆரம்பித்திருந்தாலும் இன்றைய காலத்திற்க்கு ஏற்ப திரைக்கதையில் காமெடி கலந்து சொன்ன விதமே சிறப்பு. எல்லாம் ஒகே பாஸ் முதல் முப்பது நிமிஷம் சுமார் ரகம்னு சொல்லிட்டிங்க முப்பது நிமிடங்களுக்கு பிறகு என்ன ஆச்சு?


                    காலம் தாழ்த்தாமல் விமர்சனத்திற்க்குள் நுழைந்துவிடுகிறேன். இதுதான் எதிர்கால எழுத்திற்க்கு நல்லதும் கூட, சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் தோராயமாக ஒரு முப்பது நிமிடங்களுக்கு பிறகு படம் சுடுபிடிக்க ஆரம்பிக்கிறது. ஹீரோவிடம் அடி வாங்கியோ இல்லை ஹீரோவை கலாய்த்தோ சிரிக்க வைக்கும் காட்சிக்கு இடமேயில்லை கதையோடு நகரும் காட்சியில் இவ்வளவு இயற்கையாக நகைச்சுவை திணிக்கப்பட்டுள்ளது. படத்தில் காமெடிக்காக நிறைய மெனக்கெட்டிருப்பதும், இதற்காக ஒரு பெரிய குழுவை திட்டமிட்டு அமைத்திருப்பதும் தெரிகிறது. ராமதாஸ் (பல பேருக்கு முனிஸ்காந்த்) காமெடியை முண்டாசுபட்டி, மாநகரம் படத்திற்க்கு பிறகு மிகவும் ரசித்து சிரித்தேன். வடிவேலுக்கு பிறகு வெறும் முகத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வைக்கிறது இவரின் முகபாவனை. ஆனந்தராஜின் காமெடி கலந்த வில்லனிசம் ( குறிப்பாக பாட்டியிடம் ரேடியோவில் பேசுவது) படத்தில் அதிகம் ரசிக்கப்பட்டவை. அருண் காமராஜ் இப்படியே போனால் தயாரிப்பாளர்கள் கால்சீட்டிற்காக வாசலில் நிற்க்கும் காலம் வெகுதூரமில்லை(நீண்ட நாட்களுக்குப் பிறகு பொனதின்னியை ஞாபக படுத்தியி்ருக்கிறார்).


                   நிக்கி கல்ராணி, பிரியாணிக்கு லெக் பீஸ் எப்படியோ அப்படித்தான் மரகத நாணயத்திற்க்கு இந்த ராணி (அவ்வளவு முக்கியமான பாத்திரம்). பாலில் விழுந்த ஸ்ட்ராபொ்ரி போல ஒரு அழகு இதற்கு மேல் என்ன சொல்ல, முதல் காட்சியில் சாஃப்டாக அறிமுகமாகி அடுத்தடுத்த காட்சிகளில் மெட்ராஸ் பாசையில் எட்டு போட்டு மிரட்டுது அம்மணி. பக்கத்தில் அமர்ந்திருந்த காலேஜ் குருப்பின் சத்தத்தை வைத்து தான் அம்மணிக்கு இவ்வளவு ரசிகர்கள் உண்டு என்பதை உணர்ந்தேன்.

குடும்பத்தோடு சிரிக்கலாம் 100 சதவிதம் சிரிப்பு உத்திரவாதம்.

- பாஸ்கி.

Friday 9 June 2017

ஒரு கிடாயின் கருணை மனு

                 

                     தமிழ் சினிமா இன்றைக்கு நல்ல கதைகளை தந்து சினிமா தரத்தை உயர்ந்திக் கொண்டு போகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் இருந்தும் மத்த மொழி ரசிகர்களிடம் இல்லாத கெட்ட பழக்கம் நம்மி்ல் உண்டு அது என்னவென்றால் ஜே கோஷம் போடுவது. ஒரு வாரமாக வளைதளங்களில் ஒரு கிடாயின் கருணை மனு படத்திற்க்கு செலவில்லாமல் மார்கெட்டிங் செய்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குதான் கடவுள் தெரிவாருனு சொல்வதைப் போல இந்த படத்தை பிடிக்காதவர்கள் கண்டிப்பாக சினிமா ரசிகர்களே இல்லை என்ற கருத்தை தோழர்கள் முன் வைக்க எங்கம்மா சத்தியமா நானும் சினிமா ரசிகன்தான்டா என்று படத்தை பார்க்க முடிவு செய்தேன். கண்டிப்பாக இது நல்ல படம்தான் ஆனால் விமர்சனங்களால் சற்று ஏமாற்றம் அடைந்துவிட்டேன். ஆஹா ஓஹோ என்று தலப்பாகட்டி பிரியாணியை எதிர்பார்த்ததாலோ என்னவோ கிடைத்தது சாதாரண பாய் கடை பிரியாணி மட்டுமே(கண்டிப்பா இது காகா பிரியாணி இல்லை).


                   பிரம்மாண்ட பாடல்களும், சண்டைக் காட்சிகள் இல்லாமலும் கிராமத்து கதை இருந்துவிட்டாலே உலக தரமான சினிமா என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டோம். இத்தகைய நெஞ்சங்களுக்கு கொஞ்சம் மிஷ்கின், செல்வராகவன் மற்றும் வெற்றிமாறன் படங்களும் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன என்பதை நினைவு கூர்கிறேன்(அவ்வளவு வேண்டாம் உதாரணத்திற்க்கு கடந்த மார்ச் மாதம் வந்த மாநகரம் திரைப்படம் கடந்த வருடத்தில் ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, துருவங்கள் பதினாறு இவையெல்லாம் நிச்சயம் உலக தரமான சினிமா உறியடி கொரியன் படங்களுக்கே சாவலாக அமைந்தது)
ஒரு சாதாரண கிராமத்தில் இருக்கும் நம்ம ஹீரோவிற்க்கு முப்பத்தைந்து வயதில் திருமணமானதால் குலதெய்வத்திற்க்கு நேர்த்திக்கடனாக கிடா வெட்ட கிளம்பும் கும்பல் வழியில் ஒரு பிரச்சனையை கிளப்புவதும் அதிலிருந்து மீண்டு வருவதே கதை. தமிழ் சினிமாவிற்க்கு புதிய கதைகளம் என்றாலும் சில இடங்களில் திரைக்கதை சோர்வை தருகிறது. குறைந்த பட்டெஜ் படங்களுக்கான ஆதர்சன நாயகர்கள் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே அதில் விஜய் சேதுபதிக்கு பிறகு விதார்த் தான். ரவிணா ரவி எங்கயோ கேட்ட குரல் என்று நெட்டில் துழாவியதில் இவர் தான் இன்றைய தமிழ் சினிமாக்களில் பல ஹீரோயின் குரல்களுக்கு சொந்தக்காரி என க்ளிக்கியது(முக்கியமாக எமிக்கு இவர் தான் ஆஸ்தான டப்பிங் ஆர்டிஸ்ட்). படத்தில் இரட்டை அர்த்த வசனங்களும், முடிவில் வரும் காட்சியும் தனிபட்ட முறையில் கவர்ந்தவை. இதுப்போன்ற படங்கள் வரவேற்க்கபட வேண்டும் ஆனால் மிகையான விமர்சனங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிடக்கூடாது. மிகுந்த எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாள் இனிய நாளாக அமையும்.


- பாஸ்கி.

Saturday 3 June 2017

கலைஞர் - வைர(த்திற்கு) விழா

   
           
                  தலைவர் கலைஞர் அவர்களின் 94வது பிறந்த நாள் இன்று. தன் வாழ்நாளில் 60 வருடங்களை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியமைக்காக தலைவருக்கு வைர விழாவை கோலாகலமாக ஏற்பாடு செய்து வருகிறது கழகம். 60 என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. இது போராட்டங்களும், வெற்றி தோல்விகளும் நிறைந்த வாழ்க்கை. 1957 முதல் இன்றைக்கும் அவருடைய அரசியல் பணி தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளது. அரசியல் நோக்கில் எத்தனையோ இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவரின் இலக்கியத்திற்கோ அடிமைகள் கோடியில் உண்டு. இவர் தமிழுக்கும், தமிழ் இனத்திற்க்கும் ஆற்றிய தொண்டோ மறக்க முடியாதவை. உழல் செய்தோ, ஊரை உலையிலுட்டோ சிறை செல்லவில்லை. ஈழத்திற்க்கும், இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக மட்டுமே சிறையை கண்டதுண்டு. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் ஆனால் கலைஞர் என்றும் எங்கள் தலைவரே. தமிழகம் நிறைய வளர்ச்சியையும், நிறைய திட்டங்களையும் இவரால் கண்டதுண்டு. இட ஒதுக்கீடும், பெண்களின் சொத்துரிமை எல்லாம் இன்றும் பேசப்படுபவை. வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, பயன் பெற்றவன் ஏசுவதே இந்த மண்ணின் நாகரிகமானது அதுவே தலைவரின் வெற்றிபடியாய் போனது. 80 வயது வரை சுறுசுறுப்பு, நினைவாற்றல், ஓயா உழைப்பு இத்தனையும் ஒன்றாய் அமைந்து இந்த தலைவருக்கு மட்டுமே. தமிழகத்தில் மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுத்ததில் கலைஞருக்கு நிகரும் யாருமில்லை இவர் தலைமைக்கு நிகரும் ஏதுமில்லை.


                        அரசியல் கலந்த படைப்பாளியாய் இவருக்கு நிகர் இவரே இதுவரையும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை. ஆயிரம் நிறைகளும், குறைகளும் சொல்லப்பட்டாலும் அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அசைக்கமுடியா அரசியலின் கலங்கமில்லா தூண் இந்த தலைவர். அரசியல் படித்தவனெல்லாம் அரசியல் செய்யமுடியும் ஆனால் அரசியலை வெல்லமுடியாது. இவரோ அரசியலை படித்தவர் இல்லை அதன் சூழ்ச்சியை படித்தவர் இதுதான் தொன்னூறு வயதிலும் தலைவன் என்ற இடத்தை தக்க வைத்துள்ளது. அரசியல் ஒருபுறம் உயர்த்த மறுபுறமோ தமிழால் உயர்ததப்பட்டார். இடம், பொருள், ஏவல் இதை முழுமையாக பின்பற்றும் ஓரே தலைவன், குறிப்பாக அதிகமாக பேசப்பட்டவையே ஆனாலும் மறக்க முடியாத சம்பவம் பிரபல அரசு கல்லூரி ஒன்றில் விருந்தினராக அழைப்பு விடுக்க தேர்தல் நேரம் என்பதால் கண்டிப்பாக அரசியல் பேசக்கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர் இதற்கு எந்த எதி்ர்ப்பும் இல்லாமல் கலந்துக் கொண்டு பேச்சை முடிக்கும் தறுவாயில் அனைவருக்கும் உணவுண்டு, சாப்பிட்டு முடித்ததும் மறக்காமல் இலையை தூக்கியெறிந்து விட்டு கையை கழுவி விடுங்கள் என்று சொல்ல சத்தம் காதை கிழித்ததாம். இத்தகைய எல்லா திறமை மிக்க தலைவன் எண்ணிக்கையில் மிகக் குறைவே.


                         உழல் குற்றவாளிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நாட்டில், குற்றமற்ற மனிதரை தூக்கி கொண்டாடுவதில் தவறேதும் இல்லையே. இந்த தலைவனால் சூரியனின் வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டே தான் போகுமே தவிற குறைய போவதில்லை. இத்தகைய சூரியனிடமிருந்து பிறிந்த கோள்கள் தான் மற்றவை. வடமாநிலத்திலும், சொந்த மாநிலத்திலும் தன்னையும் கட்சியையும் அழிக்க நினைத்த எதிரிகளை மண்ணோடு மண்ணாக்கிய பெருமை இந்த தலைவனை மட்டுமே சாரும். எது எப்படியோ திமுகவிற்கு இவர் "ஆயிரம் பொன்" என்பதை மறுக்க முடியாத உண்மை.

வாழ்க மு.க வளர்க தி.மு.க

Monday 29 May 2017

லென்ஸ் (இணையதள நடுநிசிகள்)

                 

                 குறைந்த பட்ஜெட்டில் தயாரான தமிழ் மொழி (மற்ற மொழி படங்களுக்கும் பொருந்தும்) படங்களை பக்கத்து மாநிலங்களில் கூட திரையிடப்படுவது வழக்கத்தில் இல்லாத ஒன்று. இப்படியான பட்ஜெட் படங்களையெல்லாம் பக்கத்து மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் இணையத்தில் தவிர வேறு எப்படியும் பாா்க்க முடியாது, பெங்களூரில் வசித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இந்த கா்மா பொருந்தும். இத்தகைய கா்மாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லாமல் 8 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். இப்படித்தான் நல்ல படங்களை திரையிடாமல் என் சாபங்களை வாங்கிக் கொண்டிருங்கின்றது இந்த பூங்கா நகரம். இத்தகைய சூழலில் திருட்டு விசிடி கை கொடுத்தாலும் தரமான படங்களை இணையத்தில் பார்ப்பதை தவிா்த்து விட்டு பெங்களூரில் இருந்து சராசரியாக 45 கிமீ தூரத்தில் உள்ள ஒசூர் சென்று பாா்ப்பது வழக்கம். கடந்த 8 வருடங்களில் சுமார் ஆறு படங்கள் இப்படி ஒசூர் சென்று பாா்ததுண்டு. சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த கா்மா லென்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் என்னை துரத்தியது, படத்தின் விமர்சனங்கள் என்னை எப்படியும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று உசுப்பேற்றியது. சாக்கடையில் தொலைத்த காசைத் தேடும் கையைப் போல இணையத்தில் துழாவினேன் இந்த நகரத்தில் எங்கும் வெளியிடவில்லை அதுமட்டுமில்லாமல் ஒசூரிலும் படம் வெளியாகவில்லை எனத் தெரிந்த பின்பு பல மணி நேரத்திற்க்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ ஒரு காரணமாக கிருஷ்ணகிரி போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் உடனே பயணித்து எனது வேலையையும் முடித்த பிறகு லென்ஸ் திரைப்படம் ஒடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சென்றடைந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்களே இருந்த தருணத்தில் கூட்டத்தில் இருந்த எண்ணிக்கை 10 பேர் இருந்திருக்க கூடும் இத்தனைக்கும் வெளியாகிய மூன்றாவது நாள் (ஞாயிற்றுக் கிழமை வேறு), நல்ல படங்களை நாம் எப்போதும் ஆதரித்ததில்லை இனியும் ஆதரிக்கப்போவதில்லை என்பதை அங்கு வந்திருந்த கூட்டத்தை வைத்துத் தெரிந்துக்கொண்டேன்.


                  படம் ஆரம்பித்த நிலையில் இந்த 10 என்ற எண்ணிக்கை 20 இல்லை முப்பதை அடைந்திருக்கும். வெற்றிமாறன் தயாரிப்பும், படத்தின் போஸ்டரும் பெரும் தான் எதிர்பாா்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அனுமதியின்றி படம்பிடித்து அதை இன்டெர்நெட்டில் பரப்புவதாலும் அதனால் ஏற்படும் அவமானங்களால் உயிரை மாய்ப்பதே படத்தின் கதை. ஆரம்பமே முகம் சுளிக்க வைத்தாலும் படத்திற்கான முக்கிய காட்சி என்பதாலும் தவிர்க்க வேண்டாம். படத்தின் ஆரம்பத்தில் தொடரும் பயம் க்ளைமெக்ஸ் வரை துளியும் குறையாமல் அப்படியே நீள்கிறது. இடையில் இரண்டு மூன்று ஜோடிகள் படத்தின் பாதிப்பால் பாதியிலேயே ஜூட் விட்டன. இந்த கதையின் சம்பவங்கள் அவ்வபொழுது செய்திகளாக காதில் விழுந்திருந்தாலும் காட்சிகளாக்கிய விதம் பயத்தின் உச்சம். இன்றைய பெரும் பொழுதுப்போக்கான இன்டெர்நெட்டின் நடுநிசிகளை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறது இந்த லென்ஸ். அடுத்தவர்களின் வலிகளால் இன்பம் அடையும் மனிதர்கள் மிருகத்தின் சாயல் என்பார்கள் அதுதான் இந்த படத்தின் மைய கருவும் கூட, இப்படியான கதைகளத்தை இயல்பாக காட்டியது ஒருபுறம் என்றாலும் படத்தின் காட்சிகள் ஒருவித கசப்பான அனுபவத்தை தருகிறது. லென்ஸ் கண்டிப்பாக குடும்ப படமா என்றால் ஆம் இது இரு குடும்பங்களின் பிரச்சனயை சொல்லும் படம் ஆனால் குடும்பமாக பார்க்க வேண்டிய படமா என்றால் குடும்பத்தில் உள்ள முக்கியமாக வளரும் பருவத்தினர் எல்லோரும் கண்டிப்பாக தனித்தனியாக பாா்க்க வேண்டிய படம்.


- பாஸ்கி.

Monday 22 May 2017

மாயநதி



                       பரபரப்பிற்க்கு பஞ்சமில்லாத தமிழகத்தில் இன்றைய பரபரப்பான செய்தி என்பது தலைவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?. அரசியல் வராமல் அரசியல் செய்வது தான் இவரோட ஸ்பெஷாலிட்டியும் கூட, இதில் என்ன விஷேசமென்றால் இந்த எதிா்பாா்ப்பு இன்றோ நேற்றோ ஆரம்பித்தில்லை கடந்த 20 வருடங்களாகவே அரசியலுக்கு வருவாரா இல்லையாயென்று மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டுதான் உள்ளனர் இதே எதிா்பாா்ப்பு இன்னும் வருட கணக்கில் தொடா்ந்தாலும் ஆச்சாியமில்லை. தலைவரும் வடிவேலு காமெடியில் வருவதைப் போல வருவேன் ஆனா வரமாட்டேன்னு தொடா்ந்து மக்களை இல்லையில்லை அவரது ரசிகா்களை எதிா்பாா்ப்பின் உச்சத்தில் கொண்டு செல்கிறாா். அரசியலில் நுழைவதற்கான முதல் படியாகத்தான் கடந்த வாரம் நடந்த ரசிகா்களுடனான போட்டோ சந்திப்பு இருக்குமென பச்சி சொல்கிறது.


                     மாவட்ட வாாியாக குறிப்பிட்ட ஆட்களை தோ்ந்தேடுத்து செல்ஃபி எடுத்தாயிற்று இதில் முதல் ஊழல் என்பது ரசிகா்களை விட ரசிகா் அல்லாதோா் தான் அதிகம். இதில் உண்மையான ரசிகா்கள் யாரென்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். காலங்காலமாக ரசிகன் என்ற போா்வையில் அடிமைகளாய் இருப்பவர்கள் அவர்களுக்குள்ளே புலப்புவதும், கண் துடைப்புக்குமானக் காரணம் என்னவென்றால் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்த பாா்ட்டிகளை யாரென்றே அறியாதது தான், இந்த போட்டோ சூட் வைத்த காரணமே மாவட்ட வாாியான பதவிகளுக்கு போட்டோ ஆசாமிகளை தயார் செய்ய தான் என்று வருங்கால பதவியை பறிக்கொடுத்த ரசிகா்களின் கருத்தாக உள்ளது. மாநிலம் தலைவரின் குடிமியை பிடித்து நான்றாக ஆட்டிக் கொண்டிருக்க பத்தா குறைக்கு அடுத்து தமிழகத்தை உம்மை தவிர வேறு யாராலும் ஆள முடியாதென அவரது சகுனிகள் அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றனர். இடைத்தோ்தலில் திடிா் அரசியல்வாதிகள் முளைத்து தலைவரிடம் ஆசிா்வாதம் வாங்கியதில் க்ளிக் ஆயிற்று அடுத்த ஆடு கண்டிப்பாக தலைவர்தான் என்று. இதெல்லாம் ஒருப்பக்கம் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாலும் அடுத்த பக்கம் தலைவரை அடுத்த காமராஜர் மற்றும் அண்ணா என்று அவரது ரசிகா்களின் கூப்பாடுகளை கேட்கையில் வயிறு ஜெலுசிலை தேடுகிறது. எது எப்படியோ அரசியலுக்கு வந்துட்டா அவரோட படத்துல வா்ர மாதிரி தன்னலத்தையும் உற்றாா் நலத்தையும் பொறுட்படுத்தாமல் மக்களின் நலத்திற்காக மட்டுமே பாடுபடுவாரோனு தோணுது, இந்த மாயநதி அரசியலில் பாயுமோ இல்லையோ எல்லாம் அந்த பாபாவிற்கே வெளிச்சம்.

- பாஸ்கி.

Friday 12 May 2017

நியூஸ் கபே - 3



                    தல நடித்த விவேகம் படத்தின் டீசா் வெளியாகும் என பெரும் எதிா்ப்பாா்ப்பில் இருந்த தருணம் இரவு காத்திருந்து பாா்க்க வேண்டுமென்ற ஆா்வம் வேறு குறித்த நேரத்தில் இல்லாமல் ஒரு மணி நேரம் முன்னதாகவே வெளியிடப்பட்டன. டீசரை வைத்து பாா்க்கையில் ஒரு இன்டா்நேஷனல் குற்றவாளியை வலைப் போட்டு தேடப்படும் கதையைப் போல உள்ளது. 53 நொடிகளில் 45 நொடிகள் தல தாிசனம் தான், இன்னும் நான்கைந்து வருடத்திற்க்கு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மட்டுமே நடிக்கும் உாிமையை தல அளித்துவிட்டாா் என்றாலும் ரசிகா்களால் பொறுக்கொள்ள முடியும். பில்லாவில் ஆரம்பித்து கோா்வையாக மற்ற எல்லா படங்களின் டீசாிலும் வந்ததைப் போலவே இதிலும் தல குரலில் வரும் வசன உச்சாிப்பு அட்டகாசம். முந்தைய படங்களில் வரும் தலயின் சால்ட் அன்ட் பெப்பா் ஸ்டைலை விட இதில் தூக்கலாகவே உள்ளது கண்டிப்பாக இந்தியாவின் ஜாா்ஜ் க்லூனி நம்ம தல.      


                      சாதாரண சினிமா ரசிகனாய் இல்லாமல் நிறைய எதிா்பாா்ப்புடன் பாகுபலி படத்தை ரசிக்க காத்திருந்தேன். படத்தை வெளியிடும் நாளில் முதல் காட்சியாய் பாா்த்துவிட வேண்டும் என்ற ஆா்வம் இருந்தும் இரண்டு காரணத்திற்காக ஆா்வத்திற்க்கு ஓய்வு தந்துவிட்டேன் முதல் காரணம் டிக்கெட் விலை சாதாரணமாக 150 லிருந்து 300 வரை விற்கப்படும் ஆனால் பாகுபலிக்கோ 300 லிருந்து 800 வரை விற்க்கப்பட்டது. (இவ்வளவு விலை குடுத்து பிற்காலத்தில் கூட அது எப்படிப்பட்ட படமாய் இருந்தாலும் பாா்க்க மனம் வராது) இன்னொரு காரணம் கூட்டத்தால் இரண்டு வாரங்களாய் டிக்கெட் கிடைக்காமல் போனது தான். எனது அலுவலகத்தில் உள்ள நண்பா்களின் நச்சாிப்பையும், இம்சையையும் அடக்க முடியாமல் படத்தை பாா்க்க முடிவு செய்தேன் அதுவும் 250 ருபாய் டிக்கெட்டில் மட்டுமே பாா்க்க வேண்டும் என்ற கண்டிஷனோடு படத்தின் கோா்வையை மறக்க கூடாதென இரண்டாம் பாகத்தை பாா்க்கும் முன் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை பாா்த்தேன் அதனால் தான் என்னவோ முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஆரம்பமே இது ஒரு அக்மாா்க் தெலுங்கு டப்பிங் படம் என்பதை உணா்த்துகிறது. வசன உச்சாிப்புகள் ஒரு பக்கம் சலிப்பை ஏற்பட வைத்தாலும் காட்சிகளின் அழகு அவ்வெறுப்புகளை வலுவிழக்க செய்கின்றன. வெளியான ஒரு வாரத்தில் ஆயிரம் கோடி வசூலென்பது சாதாரண விஷயமில்லை இந்திய சினிமாவை உச்சத்தில் கொண்டு சென்றது மட்டுமில்லாமல் உலக சினிமாக்களை திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. எதிா்மறை விமா்சன ஆசாமிகள் ஒரு புறமிருந்தாலும் மறுபக்கம் படத்தின் வியாபாரம் வளா்ந்துக் கொண்டேதான் போகிறது.
               

                     தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்க்கு வித்திட்ட பெருமையை எப்படி ஷங்கரை சாருமோ அதைப்போல வெறும் டோலிவுட் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களை ஓ போட வைத்த பிரம்மாண்டத்தின் பெருமை ராஜமெளலியையே சாரும். பாடல்களில் மட்டும் பிரம்மாண்டத்தை காட்டிய தா்க்கத்தை உடைத்து அதை கதைகளிலும் காட்டியதில் மிகப்பொிய பங்களிப்பை பெற்றுவிட்டாா் இந்த ராஜமௌலி என்னும் பாகுபலியின் பிரம்மா. இந்த கதைகளத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரம் என்றில்லாமல் அனைவரையும் அசத்த வைத்துள்ளது இவரின் இயக்கம். படத்தின் பிண்ணணி இசை அவ்வளவு அருமை You tube-ல் கீரவாணியின் ஒவ்வொரு பாடல்களையும் தேடி பிடித்து கேட்க தொடங்கிவிட்டேன் என்றால் பாருங்களேன். இந்த படத்தில் பெரிய பங்களிப்பையும், படத்தின் கதையை கச்சிதமாக கொண்டு செல்லும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டாா் ரம்யா கிருஷ்ணன். அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தும் இவர் தோன்றும் இடங்களில் தான் சத்தம் காதை பிளக்கிறது நானும் இவரை அதிகம் ரசித்தேன் என்பது வேறு விஷயம். இன்னும் குறைந்தது இரண்டு வருடத்திற்காவது பாகுபலியின் சாதனைகளை பற்றி இந்திய சினிமா புகழ்பாடிக்கொண்டிருக்கும்.

- பாஸ்கி.


Saturday 22 April 2017

நியூஸ் கபே - 2



அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஆறு நாட்கள் விடுமுறை இருந்தும் கிராமத்தில் JIO நெட்வோா்க் இல்லாத ஒரே காரணத்தால் மொத்த நாட்களையும் வெட்டியாக கழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இந்த நேரத்தில் கொஞ்சம் ஆறுதலாக தமிழ் புத்தாண்டிற்க்கு கடம்பன், சிவலிங்கா, பா.பாண்டி என மூன்று படங்கள் வெளியாகின. பொதுவாக ஆா்யா படத்தை பத்து பதினைந்து முறை அலசியப் பிறகு நல்ல படம் என்றால் ஒரு முறை பாா்ப்பேன் அப்படியில்லாமல் படம் சுமாா் என்றாலே எட்டடி இல்லாமல் எண்பது அடி தள்ளி நிற்ப்பது வழக்கம் மீகாமன் படத்திற்க்குப் பிறகு ஆா்யாவை மறந்துவிட்டேன் என நினைக்கிறேன் நீண்ட இடைவேளைப் பிறகு கடம்பன் பட டீசரை ரசித்தேன் அந்த ரசிப்பை கொஞ்ச நாட்கள் கூட அனுபவிக்க முடியாதபடி செய்தது படத்தின் விமா்சனம் பிறகு என்ன எப்பவும் போல ஆா்யா படத்திற்க்கு தடா விதித்துவிட்டேன். எது எப்படியோ ஆா்யாவிடம் எனக்கு பிடித்தே அவர் நடிக்கும் சிறப்புத் தோற்றங்கள் தான் ஏனேன்றால் 10 நிமிடம் மட்டுமே என்பதால் எந்த ஒரு சலனமும் அடைவதில்லை, நடிகா்களில் அதிகம் சிறப்புத் தோற்றத்தில் நடித்தவா்களில் இவரும் ஒருவா் என நினைக்கிறேன்.


                       அடுத்த படமான சிவலிங்கா படத்தை கன்னடத்தில் பாா்த்ததால் வந்த பாவத்தையே எங்கு தொலைப்பது என்பதை தொியாமல் இருக்கிறேன் இதில் தமிழுலும் பாா்த்து மேலும் பாவத்தை ஏன் சோ்ப்பான. மக்களின் சூப்பா் ஸ்டாரான சின்ன கபாலியின் படங்களை அதன் டீசரை வைத்தே படத்தின் கதையையும், இதனால் எப்படி நாம் தாக்கப்பட போகிறோம் என்பதையும் சுலபமாக கணித்துவிடமுடியும். MSKS படத்தின் பாதிப்பு மனநிலையை வெறுப்பின் உச்சத்திற்க்கு கொண்டு சென்றுவிட்டது இன்னோரு ரவுண்டுக்கெல்லாம் இந்த உடம்பு தாங்காது சாமி. டான்ஸ், பாட்டு மட்டுமே நம்பி போக வேணடிய கட்டாயம் அப்புறம் ஹீரோயின் இதுக்கு மட்டும் குறையே வைக்காத ஒரே நடிகரா இவர சொல்லலாம். இறுதி்ச்சுற்று , ஆண்டவன் கட்டளை போன்ற அருமையான படைப்புகளை தந்த ரித்திகா சிங்கை இப்படியான மசாலா படத்தில் நடிக்க வைத்த பாவத்தை தமிழ் சினிமாதான் சுமக்க வேண்டும்.


                    இரண்டு படங்களையும் ஒதுக்கிவைத்து மூன்றாவது படமான பவா் பாண்டியைத் தோ்ந்தேடுத்தேன் இதற்கு முக்கிய காரணம் தனுஷ் மற்றும் ராஜ்கிரண். ஆளைப்பாா்த்து எடை போடக்கூடாது என்பதற்கு கண்ணுக்கு தொிந்த உதாரணமாய் தனுஷ். நடிப்பு, எழுத்து, தயாாிப்பு என எல்லா இடத்திலும் முத்திரை பதித்து இயக்குனா் அவதாரத்தில் அடியெடுத்து வைத்திலிருந்து ஏகோபித்த எதிா்ப்பாா்ப்பை தூண்டியது. இந்த படத்தில் ஒரு சராசாியான இயக்குனாின் படைப்பு என்றில்லாமல் ஒரு மெச்சூாிட்டியை பாா்க்க முடிந்தது. ஒரு எழுத்தாளராக பிறை தேடும் பாடலிலும், பாடகராக அம்மா அம்மா பாடலிலும், தயாாிப்பாளராக காக்கா முட்டை படத்திலும் மிகப் பொிய ஆச்சா்யத்தை உணா்ந்தேன் (இத்தனை திறமைகளா என்று சந்தேகத்தில் தலையை பிச்சிக் கொண்ட அனுபவங்களும் உண்டு) அதைப் போலவே பவா் பாண்டி படத்தின் மூலம் ஒரு மெச்சூாிட்டியான இயக்குனரை பாா்க்க முடிந்தது. கடைசி இருபது நிமிடங்கள் வரும் காதல் காட்சிகள் நன்றாக ரசிக்க வைத்திருக்கிறது தனுஷின் இயக்கம். லாஜிக்கை பாா்க்காத வரையில் இது நல்ல படம். எண்ணெய்யில் ஒட்டாத தண்ணியைப் போல மடோனாவின் பாத்திரம் கதையில் ஒட்டாமல் போவது ஏனோ?. முதல் பாதியில் ராஜ்கிரண் காட்சிகள் அனைத்தும் மஞ்சப்பை படத்தின் தொடா்ச்சியாக தொிவதும், ப்ளாஷ்பேக்கில் தனுஷை ராஜ்கிரண் என்று காட்டுவதும் தவிர மற்ற எல்லாம் ரசிக்கும் ரகம்.



- பாஸ்கி.







Monday 10 April 2017

மணல் மாஃபியா

அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஒரு அலுவலகப் பயணம் மேற்க்கொள்ள வேண்டிய கட்டாயம். பயணம் செய்த வழியில் ஒரு சில ஆறுகளை கடந்து செல்ல அந்த ஆறுகளை கடக்கையில் பாலைவனத்தையும், மயானத்தையும் கடப்பதுப் போல ஓர் உணா்வை தந்தது. தமிழகத்தில் இன்றைக்கு பல ஆறுகளின் நிலையும் இதுதான். ஆறுகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றால் அது மணல் கொள்ளை இதனால் பாதிப்பு என்பது குறிப்பிட்ட மக்களுக்கென்று இல்லாமல் நம் எல்லோா்க்கும் தான். மணல் கொள்ளையைக்கண்டு சாதாரண மக்களும், தன்னாா்வலா்களும் கலங்குவதை கண்கூடாக பாா்க்க முடிகிறது. பொதுவாக எல்லா ஆறுகளிலும் அரசாங்கம் அளித்த குறிப்பிட்ட அளவு அனுமதியை மீறி தன் விருப்பத்திற்க்கு மண்ணை அள்ளும் துரோகிகள் ஏராளம், இதை தடுக்க முடியாமல் சமுக ஆா்வலா்களும், சமுகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வெம்பிக் கொண்டிருக்கின்றனா். நீதி, நோ்மை, நியாயங்களை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு நடைமுறையில் அது அத்தனையும் கோட்டைவிட்டு நிற்கிறோம். இந்த மணல் கொள்ளையின் மாற்றங்களை எத்தகைய அரசு அதிகாாிகள் மற்றும் அரசியல் ஜீவிகள் வந்தாலும் இந்த நிலையில் மாற்றதை துளியும் எதிா்பாா்க்க முடியாது என்பதை மட்டும் ஆணித்தனமாக சொல்லமுடியும். இந்த மணல் கொள்ளையா்களை தூணாக தாங்கியிருப்பதே இப்படிப்பட்ட அதிகார புள்ளிகள் தான். இந்த சட்ட விரோதத்தை சிறு உறுப்பினாிலிருந்து பொிய அதிகாரிகள் வரை எல்லோருடைய ஆதரவில் தான் இவ்வளவு சாதரணமாக அவா்களால் தவறை சாியாக செய்ய முடிகிறது. இத்தகைய மணல் கொள்ளையை தனித்து எதிா்ப்பதேன்பது நினைக்கவும் முடியாத காாியம். தனி ஒருவனாக எதிா்த்த மக்களுக்கும், ஆா்வலர்களுக்கும் கிடைத்த பரிசோ மிரட்டலும், வெட்டுகளும் மட்டுமே. இந்த மணல் கொள்ளையால் வரும் பாதிப்பை காணும் நாட்கள் வெகு தூரமில்லை. இத்தகைய சட்டவிரோதத்திற்கு காரணிகள் வேறுயாராக இருக்க முடியும் இதை கண்டுகொள்ளாத மக்களும், பயமில்லாமல் கொள்ளையா்களை ஆதாிக்கும் அதிகாாிகளும், அரசியல் புள்ளிகளும் மட்டுமே.


                    அரசியல் வாழ்வி்ல் பெரும் துருவங்களாக காட்டிக்கொள்ளும் எல்லாக் கட்சிகளும் இந்த மணல் கொள்ளை விஷயத்தில் மட்டும் மெகா கூட்டணியை அமைத்துக் கொள்கிறது. அண்டை மாநிலங்களில் இப்படியான பாதிப்புகள் ஏதுமில்லை என்பதால் வற்றாத ஆறுகளை சுலபமாக காணமுடிகிறது. நம்முடைய வாழ்வாதாரத்தை கொலை செய்து குற்றவாளியாக அலைந்துக் கொண்டிருக்கும் நாம் இதையெல்லாம் காப்பாற்றாமல் வேறு எதை சாதிக்க அலைந்துக் கொண்டிருக்கின்றோம் என்பது ஒவ்வொாின் மனசாட்சிகளுக்கு மட்டுமே வெளிச்சம். இயற்கை தந்த பெரும் சொத்தான மணலை கொள்ளை அடிக்கும் அயோக்கியா்களை தட்டிக் கேட்டால் புது புது காளான் முளைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு பெரும் துணையாக உள்ள அதிகார வா்க்கங்களின் கதவை தான் ஓங்கி தட்ட வேண்டும். தைாியத்தை தைாியமாக வெளிப்படுத்துவதால் மட்டுமே மாற்றத்தை உணரமுடியும்.


                     நம்முடைய அடையாளத்தை காப்பாற்ற திரண்ட இலட்சங்களில் கொஞ்ச நஞ்சம் கூட இதற்காக குரல் எழுப்புவதில்லை என்றாலும் இந்த மணல் கொள்ளை செயல்களைப் பற்றி ஒரு சின்ன பதிவையும் தன் பக்கங்களில் நிரப்புவதற்கு நேரமில்லாத மனிதா்களை பாா்த்தால், அவா்களுக்கு எத்தகைய ஆவல் இந்த சமுகத்தின் மீது உள்ளதென்பதை தெளிவாக காட்டுகிறது. வெறும் மணல் கொள்ளையை மட்டும் கடந்து செல்லவில்லை இதைப் போன்ற எத்தனையோ சட்டவிரோதங்களை கண்டும் காணாமல் இயற்கையை நிா்வாணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.


- பாஸ்கி.

Thursday 30 March 2017

நியூஸ் கபே


அன்பு உள்ளங்களுக்கு,

                         தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டிலிருந்து பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை, நம்மை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருப்பதில் அரசியல்வாதி மற்றும் நடிகா்களுக்கு மிகப்பொிய பங்குண்டு. கடந்த இரண்டு நாட்களாக Facebook, Twitter, news சேனல் என எல்லாப் பக்கமும் உச்ச நடிகாின் வெளிநாட்டு பயணத்தை பற்றி ஒவ்வொருவரும் தன் பங்கிற்க்கு வசைப்பாடிக் கொண்டிருக்கின்றனா் அதிலும் நம்ம கடமைக்கு அட்லிஸ்ட் ஒரு போஸ்டாவதி திட்டி போடனும்னு நினைக்கிறது தான் இப்போ டிரேண்டு. இப்போ எதிரா போஸ்ட் போடுற ஆளுங்க அந்த நடிகரின் படத்த முதல் ஆளா பாத்துட்டு தலைவர் மாஸ் கெத்து சீன் அப்படினும் போஸ்ட போடுவாங்க. உச்சத்தின் ஆதரவில்லாமல் இந்த பூமியும் சுழலாது என்பதை போலத்தான் இருக்கிறது இவா்களின் குமுறல்கள். ஒரு பிரஜையின் தனிபட்ட விஷயங்களில் ஈடுபடுவது தவறு என்பதைக்கூட உணராமல் ஒவ்வொருவரும் தன் சுயநலத்திற்காகவும், சொந்த அரசியலுக்காகவும் தன் கருத்துக்களை எதிராக பதிவிடுவது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இ்ப்படி மற்றவரை தூற்றி இலாபம் காணும் அரசியல்வாதிகளும், தன்னலவாதிகளும் இருக்கும் வரை யாருக்கும் எந்த பலனும் கிடைக்காமல் போகும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இத்தகைய ஜீவிகள் அடுத்தவருக்கு உதவி செய்யாமல் போனாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும்.



                         பொதுவாக ஒரு இயக்குனாின் முதல் படம் வெற்றி பெற்றால் தன் இரண்டாவது படத்திற்க்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும், அப்பொழுதான் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் அதுபோல முதல் படம் தோல்வி என்றாலும் இரண்டாவது படத்தை எப்படியும் வெற்றி படமாக கொடுக்க அதற்க்கும் மெனக்கெடல் அவசியம். தோல்வியோ வெற்றியோ ஒரு இயக்குனாின் இரண்டாவது படைப்பில் தான் அவரின் திறமையை மதிப்பிட முடியும் அப்படித்தான் முதல் படத்தில் கோட்டைவிட்டு தன்னுடைய இரண்டாவது படத்தை ஒரு நல்ல படைப்பாக கொடுத்தவா் இயக்குனா் விஜய் மில்டன். இந்த இயக்குனாின் மூன்றாவது படமான 10 எண்றதுக்குள்ள படத்தை எத்தனையோ எதிா்ப்பை மீறி பாா்த்து மீளமுடியாத துயரத்தையெல்லாம் அனுபவித்த கதைகள் உண்டு. சில நாட்களுக்கு முன் இதே இயக்குனாின் நான்காவது படமான கடுகு வெளியானது சில பல யோசனைக்குப் பிறகு மனசாட்சியை சமாதனப்படுத்தி படம் பாா்க்கம் எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.


                              நம் நாட்டில் பல மரபுக்கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன அதில் ஒன்றான புலிவேஷம் கட்டும் மனிதனின் கதை தான் படத்தின் கரு என்றாலும் அதற்கான காட்சிகள் படத்தில் சில இடத்தில் மட்டுமே காட்டப்படுதால் கொஞ்சம் ஏமாற்றாய் போனது. இப்படியான மரபுக்கலைகள் அழிந்து வருவதை இந்த சமுகத்திற்கு இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும். கலைகளும், கலைஞா்களின் மோசமான நிலையையும் சமுகத்தில் அழுத்தி சொன்னால் மட்டுமே கொஞ்சமாவது மக்களை சென்றடையும் அப்படியான அழுத்தமேதும் இல்லாமல் கதையை வேறோரு பிரச்சனை நோக்கி நகா்த்தியதால் வழக்கமான படைப்பாக அமைந்துவிட்டது. படத்தில் ராஜகுமாரன் மற்றும் சீனி பாத்திரத்தின் காட்சிகள் மட்டும் அப்ளாஸ் ரகமாக கொடுத்துவிட்டு பரத்தை தவிக்கவிட்டிருப்பது அய்யோ பாவம். பா்சனலாக ராஜகுமாரன் மற்றும் சீனி வரும் காட்சிகளும், இரயிலில் ப்ளாஸ்பேக் காட்சியும் நன்கு ரசிக்கும்படி இருந்தது.


-பாஸ்கி.

Thursday 23 March 2017

மாநகரம் எனும் பொக்கிஷம்


அன்பு உள்ளங்களுக்கு,
                
                தமிழகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நம் எல்லோரையும் பரபரப்பாக வைத்திருக்கையில், கடந்த ஒருவாரமாக திரும்பியப் பக்கமெல்லாம் மாநகரம் திரைப்படத்தின் விமா்சனம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு என்பது அப்படத்தின் விளம்பரமும், விமா்சனமும் மட்டுமே. இதில் படத்தின் விளம்பரம் என்னதான் பிரம்மாண்டமாக இருந்தாலும் படத்தின் விமா்சனம் நெகட்டிவ் என்றால் நாமம் தான் மிஞ்சும் அதுப்போல விமா்சனம் பாஸிடிவ் ஆனாலும் விளம்பரம் இல்லை என்றாலும் அதோ கதிதான். எல்லோரையும் போல நானும் விமா்சனத்தை வைத்து நல்ல படமா இல்லை சுமாா் ரகமா என முடிவெடுத்த பிறகே ரிஸ்க் எடுக்க தயாராகுவேன். அப்படித்தான் மாநகரம் படத்தின் பல அலசலுக்கு பிறகு படத்தை பாா்த்தே தீர வேண்டும் என எனக்குள் இருந்த பூனை என்னை உசுப்பேற்றியது.

             
              படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை Left, Right, Back னு எந்த பக்கமும் திரும்ப விடாமல் செய்துவிட்டது படத்தின் திரைக்கதை. நடிகா் தோ்வும் அவா்களின் நடிப்பும் படத்திற்கு மிகப்பொிய ப்ளஸ். இரண்டு, மூன்று இழைகளை ஒரே புள்ளியில் சோ்க்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எத்தனையோ இருந்தாலும் மாநகரம் ஒரு புதுமையான திரைக்கதையை தந்திருக்கிறது. இப்படியான கதைகளத்தைக் கொண்ட படங்களில் சில படங்கள் மட்டுமே வெற்றியை சந்தித்திருக்கையில் இதில் மாநகரம் தனி முத்திரை பதித்திருக்கிறது.  தமிழ் சினிமாவில் பொதுவாக ஒரு நடிகா் இல்லை இயக்குனாின் படத்தை பாா்க்கும் பொழுது படத்தின் சில காட்சிகள் அந்த நடிகனின் முந்தைய படங்களின் தாக்கத்தை அளிக்கும். இத்தகைய சுழலில் ரசிகனின் மனநிலையோ இது அதுல என்றுதான் யோசிக்கத்தோன்றும். அப்படி எந்த ஒரு மனநிலையையும் இந்த மாநகரம் தரவில்லை. படத்தின் சில காட்சிகள் (ஸ்ரீ எங்கடா என் பேக் என்று கேட்கும் காட்சியிலும், மதுசூதனன் துப்பாக்கியை சந்திப் கிஷணிடம் காட்டும் நேரத்தில் சிறுவன் தலையசைக்கும் காட்சியிலும்) மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக ஆக்சன், மசாலாக்களின் மோகத்தில் இருக்கும் நமக்கு ஒரு விசித்திரமான கதைகளத்தை தந்திருக்கிறது இந்த மாநகரம். கடினமான கதையை சாதாரணமாக கொடுப்பதிலும், சாதாரணக் கதையை ஸ்பெலாக கொடுப்பதிலும் அந்த திரைக்கதையின் யுக்தியைப் பொறுத்தே படத்தின் வெற்றி உள்ளது. நானும் நல்ல படத்தை தருகிறேன் என்னும் இயக்குனா்களை இந்த படத்தை பாா்க்க வைக்கலாம் அப்படியாவது திருந்த வாய்ப்பிருக்கிறது. அவ்வப்பொழுது மட்டுமே இதுப்போன்ற படங்கள் தமிழ் சினிமாவை காப்பாற்றுகின்றன.


                 உறியடி, துருவங்கள் பதினாறு படத்திற்குப் பிறகு என்னை வெகுவாக கவா்ந்தது இந்த மாநகரம். கதைக்காக தேவையில்லாமல் கதாபாத்திரத்தை போட்டு தள்ளும் அட்டு காட்சிகள் இதில் இல்லை என்பதில் சின்ன சந்தோஷம், க்ளைமேக்ஸில் யாருக்கும் எந்த தண்டனை இல்லை என்றாலும் ஏதோ நம்மை ஒரு கஷ்டமான மனநிலையில் தான் திரையை விட்டு விலகச்செய்கிறது இந்த மாநகரம்.

- பாஸ்கி.

Wednesday 15 March 2017

இரோம் கனவும் மக்களின் துரோகமும்


இரோம் ஷர்மிளா, யாா் இந்த பெண்மணி?.
2000ம் ஆண்டு நவம்பா் 2ம் தேதி அன்று மணிப்பூாில் இம்பால் பள்ளத்தாக்கில் மலோம் என்னும் ஊாில் Armed forces (special powers) Act எனும் ஆயதப்படையால் 10 போ் சுடப்பட்டனா். இந்த Armed forces (special powers) Act சந்தேகமுள்ள ஆட்கள் யாராக இருந்தாலும் எந்தவொரு விசாரனையுமின்றி சுடவும், போராளிகளை காலவரையின்றி காவலில் வைப்பதற்க்கும் அதிகாரமுள்ளது. 

இந்த வன்முறையை எதிா்த்தும், இந்திய ஆயுதப்படை சட்டம் மீளப் பெற வேண்டியும் நவம்பா் 4 ல் தன் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்தவர் இவா் தான். இந்த போராட்டம் ஒரு நாட்களோ இரண்டு நாட்களோ இல்லை,  16 ஆண்டுகள் தொடரப்பட்டது. போராட்டம் தொடங்கிய மூன்றாம் நாளில் இவா் தற்கொலைக்கு முயன்றதாய் கூறி காவல் துறையால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டாா். மேலும் இவாின் உடல்நிலை உணவில்லாமல் மோசமானதால் மூக்கு குழாய் வழியாக உணவு வழங்கப்பட்டது. தற்கொலையால் கைது செய்யப்பட்டவருக்கு ஓராண்டு சிறைதண்டனை மட்டுமே வழங்க சட்டமிருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்து மீண்டும் கைதுச் செய்யயப்பட்டாா் ஷர்மிளா. ஆகஸ்ட் 9ம் தேதி தனது 16 ஆண்டுக்கால போராட்டத்தை முடித்துக்கொண்ட ஷர்மிளா போராட்டத்தால் சாதிக்க முடியாததை அரசியலில் இருந்து சாதிக்கவும், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ஐ எதிா்க்கவும் 2016 அக்டோபர்-ல் புதியக் கட்சி தொடங்கினாா். 2017-ல் நடந்த பொதுத் தேர்தலில் மணிப்பூா் முதல்வரான ஒக்ரோம் இபோபி சிங்கை எதிா்த்து போட்டியிட்ட ஷா்மிளா வாங்கிய மொத்த ஓட்டுக்களின் எண்ணிக்கையோ வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே. 
மக்களுக்காக போராடிய ஓரு பெண்மணி அதே மக்களால் தோற்கடிக்கப்பட்டதும், அவாின்  அரசியல் கனவை சிதைத்தும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் கவலையில் ஆழ்த்தியது. நல்லதெது கெட்டதெது என்பதை தெரிந்தும் தமக்காக பாடுப்பட்ட ஒருவரை இப்படி தூக்கி எறியப்பட்டது ஒரு கேள்விக்குறியான ஓன்றே. நாட்டைக் கொள்ளை அடிப்பவனை பதவியில் அமா்த்துவதாலும், சமுகத்திற்காக போராடியவரை தூக்கியேறியப்படுவதாலும்  நாம் நம் எதிா்காலத்தை சீா் குலைத்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் உணா்வதில்லை இனி உணரப்போவதும் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் விளம்பரம் இல்லாமல் ஒரு குண்டூசியை கூட விற்கமுடிவது இல்லை. எல்லாவற்றிற்க்கும் விளம்பரம் தேடும் இங்கு இரோம் ஷா்மிளா தன்னை விளம்பரப்படுத்தி இருந்தால் கொஞ்சம் வெற்றி வாய்ப்பு இருந்திருக்குமோ என்னவோ. நல்ல போராளியை ஏற்க மறுக்கும் நாம் பின்பு தலைவா்களை குறைக்கூறுவது எந்த வகையில் நியாயம். உண்மை போராளிகளை ஒதுக்கி வைப்பதால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைதான் என்னவோ, ஒட்டிறக்கு பணம் வாங்கிக் கொண்டு தகுதியற்ற தலைவா்களை தோ்ந்தேடுத்து நம் நாட்டை சீரழித்து கொண்டிருக்கின்றோம். 

இப்படிப்பட்ட மாபெரும் மனிதா்களின் கஷ்டத்திலும், கனவிலும் மண்ணைப் போடுவதால் இனி சமுகத்திற்காக குரல் கொடுப்பவா்களும் தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.




- பாஸ்கி.





Tuesday 7 March 2017

பெண்மையைப் போற்றுவோம்

     
பெண்கள் வெறும் சதையோ? :

கல்லாய் இருக்கையில் சிலைவடித்தும்,
பாலபிஷேகம் செய்யும் இனமோ
நிஜத்தில் மட்டும் சிதைப்பது ஏனோ ?

கற்பனையில் மயிலே என்றும் மானே என்றும் வா்ணிக்கும் இனமோ
நிஜத்தில் மட்டும் வதைப்பது ஏனோ?

பெண்களெல்லாம் காக்கும் கடவுளாய்
பூஜிக்கும் இனமோ
அக்கடவுளின் மானத்தை அழித்து பாவங்கள் சோ்ப்பது ஏனோ?

இத்தனை இழிவை தருவது ஏனோ?
பெண்கள் வெறும் சதை தானோ.....?



அவதாரம்:

தாய் தந்தைக்கு ஒரு நல்ல மகளாய்
உடன்பிறப்பிற்கு நல்ல சகோதரியாய்
நண்பனுக்கு ஒரு நல்ல தோழியாய்
கணவனுக்கு நல்ல மனைவியாய்
குழந்தைக்கு நல்ல அம்மாவாய்
தன் வாழ்க்கையில் இத்தனை அவதாரமாய் வாழும் இந்த பெண்மையைப் போற்றுவோம்.





- இனிய மகளிா் தின வாழ்த்துக்கள்.