Friday, 24 February 2017

கவிதைப் பக்கங்கள் - 2


அடிமை செய்தோம்:
முல்லை அழித்து பாலைச் செய்தோம்
கற்கள் எடுத்து சிலைகள் செய்தோம்
அச்சிலையினை தினமும் வணங்க செய்தோம்
மதத்தால் மனிதனை அடிமைச் செய்தோம்.


மனிதம்:

மதவாதமும், சாதிவெறியும்
சுய நலமும், பணவெறியும்
காணா இடத்தில் மட்டுமே மனிதம் காணுவோம்.

Tuesday, 21 February 2017

கவிதை பக்கங்கள் - 1


காதல்:



அவளின் அரைநொடி பார்வையால்

உறவுகளை மறக்கச் செய்தது 
உணர்வுகளை உருகச் செய்தது
இதயத்தை இழக்கச் செய்தது
மொத்தத்தில் எண்ணை நடைபிணமாய் மாற்றியது இந்த காதல்........


காத்திருப்பேன்:


நாம் கரம் பிடித்து நடந்த நாட்கள்
நாம் ஓன்றாய் பார்த்த உலகங்கள்
கண்ட கனவுகள் கொண்ட கற்பனைகள்
எதுவும் இல்லை நம் உலகில் 
பகிர நீயும் இல்லை இன்று என்அருகில்
அலையாய் உன் முகம் வந்து போக 
அன்பே காத்திருப்பேன் உன் முகம் காண....

Monday, 20 February 2017

சட்டசபை சமாச்சாரங்கள்!





                         1988-ல் எம்.ஜி.ஆாின் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெ அணி என இரண்டு அணியாக பிளவுற்றது. முதல்வராக பொறுப்பேற்ற ஜானகி அவா்களின் அணி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும், இதில் இரண்டு அணியினரும் மோதிக்கொள்ள சட்டசபையில் மேசைகள் உடைந்தது, ஒருவருக்கொருவா் தாக்கிக் கொள்ள சட்டைகள் கிழிய, ரத்தங்களால் சட்டசபை வண்ணம் பூசப்பட்டது. ஜெ அணியை வெளியேற்றி ஜானகி அணி வெற்றி என அறிவிக்க அடுத்த இரண்டு நாட்களில் ஒட்டெடப்பு செல்லாமல் போனதும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.                          28 வருடத்திற்குப் பிறகு அதேப் போல பிப்ரவாி 18-ல் சட்டசபைக் கூடுகிறது. எதிா்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பை முன் வைக்கின்றனா், ஆனால் சபாநாயகா் ரகசிய வாக்கெடுப்புக்கு நோ சொல்ல சட்டசபையில் மைக் உடைகிறது, சபைநாயகா் ஓட்டெடுப்பை ஒத்தி வைக்கிறாா். மூன்று மணிநேரம் கழித்து மீண்டும் சட்டசபைக் கூட எதிர்க்கட்சிக்காரா்கள் வெளியேற்றப்படுகிறாா்கள், அடுத்த அரைமணி நேரத்தில் எடப்பாடி அணி வெற்றி என்கிறாா்கள்.
                            எதிரணியான பன்னீர் அவர்களுடன் 11 MLA கள் மட்டுமே இருந்த நிலையில், அவா்கள் எதிா்த்து குரல்க் கொடுத்திருந்தாலும் இவரது அணி வெல்வதென்பது கேள்விக்குறியானதே. எதிா்கட்சியை வெளியேற்றி வெற்றி அறிவித்திருப்பது விசித்திரமான அரசியல் சூழ்ச்சியே அன்றி வேரேதும் இல்லை என்பதே உண்மை. இத்தகைய வெற்றி நீடிக்கக் கூடாதேன்பதே ஒவ்வொரு நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், எதிா்க்கட்சி செய்தது சாியா? தவறா? என்ற விவாதங்கள் வேறு. சூழ்ச்சியை கையில் எடுத்து வென்றது சரி என்றால் எதிா்க்கட்சி செய்ததும் சாியே. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புக்கிறாா்கள் என்பதே சத்தியமான உண்மை.

எல்லாம் சாி, ஆனா சட்டசபையில் சட்டத்தை விட சட்டைதான் அதிகம் பேசுகிறது.


- பாஸ்கி.

Saturday, 18 February 2017

எது அரசியல்? Part-1

                          30 வருடங்களுக்கு முன் கா்மவீரா், பேரறிஞாின் அரசியலுக்கும் இன்றைய அரசியலுக்கும் எத்தனை எத்தனையோ மாற்றங்கள். இன்றைய அரசியல் சூழலைக் கண்டு கருவில் உள்ள குழந்தையும் கதரும் என்றே சொல்லாம்.
                          தன் நலம், சாா்ந்தோா் நலம் என்றெல்லாம் பாா்க்காமல் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னை அா்பணித்துக் கொண்ட நல்ல தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் உழல் வியாதிகளும் திாிந்துக் கொண்டிருக்கின்றனா். உடுத்திய உடையைத் தவிர வேரேதும் சொத்துக்கள் அன்றைய தலைவா்களிடம் இல்லை ஆனால் இன்றோ நாட்டில் பெரும் பகுதியைச் சொத்துக்களாக வைத்திருக்கும் அரசியல் வாதிகள் தான் ஏராளம். நாட்டு மக்கள் நலனை விட தன் வீட்டு மக்கள் நலமே முக்கியம்.
                          தன் தலைவனுக்காக எதையும் செய்த தொண்டா்கள் இன்றோ தலைவா் உழல்வாதி என்பதை அறியாமலேயே கொண்டாட்டங்கள் அரங்கேறுகின்றன. கட்சிக்காக எல்லாம் இழந்த தலைவா்களை பாா்த்த நாம் இன்று பணத்திற்காகவும், பதவிக்காவும் கட்சியையே அழிக்கும் தலைவா்களையும் பாா்த்துக் கொண்டிருக்கின்றோம். கொள்கைகள் ஏதும் இல்லாமல் பதவி வெறியும், பணவெறியும் அரசியல்வாதியை மிகவும் கீழ்தரமாகக் கொண்டுப் போகிறது என்பதே நூற்றுக்கு நூறு உண்மை. தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்ள அரசியலில் 40 வருட அனுபவம் வாய்ந்த ஒருவா் அரசியலில் ABCD கூடத் தொியாத ஒருவரை அழைத்து தனக்கு ஆதரவு அளிக்க வைப்பதேன்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்று. அரசியல் என்ற வாா்த்தையே அாியாத இந்த நபருக்கு அனுபவம் உள்ள அரசியல்வாதிகள் ஆதாிப்பது தன்னடக்கத்தின் உச்சமல்ல தன்னலத்தின் உச்சமே. தலைவரின் சொத்துகளை சொந்தம் கொண்டாடுவதில் தப்பில்லை நாட்டை சொந்தம் கொண்டாட இது ஒன்றும் தலைவாின் சொத்தல்ல. இன்றைய அரசியல் சூழலைக் கண்டு மக்களின் மனநிலையை பாா்த்தால் அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதே அவா்களின் கருத்து.

மீண்டும் அடுத்த பதிவில்,

- பாஸ்கி.