Monday, 20 February 2017

சட்டசபை சமாச்சாரங்கள்!





                         1988-ல் எம்.ஜி.ஆாின் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி மற்றும் ஜெ அணி என இரண்டு அணியாக பிளவுற்றது. முதல்வராக பொறுப்பேற்ற ஜானகி அவா்களின் அணி பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும், இதில் இரண்டு அணியினரும் மோதிக்கொள்ள சட்டசபையில் மேசைகள் உடைந்தது, ஒருவருக்கொருவா் தாக்கிக் கொள்ள சட்டைகள் கிழிய, ரத்தங்களால் சட்டசபை வண்ணம் பூசப்பட்டது. ஜெ அணியை வெளியேற்றி ஜானகி அணி வெற்றி என அறிவிக்க அடுத்த இரண்டு நாட்களில் ஒட்டெடப்பு செல்லாமல் போனதும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.                          28 வருடத்திற்குப் பிறகு அதேப் போல பிப்ரவாி 18-ல் சட்டசபைக் கூடுகிறது. எதிா்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பை முன் வைக்கின்றனா், ஆனால் சபாநாயகா் ரகசிய வாக்கெடுப்புக்கு நோ சொல்ல சட்டசபையில் மைக் உடைகிறது, சபைநாயகா் ஓட்டெடுப்பை ஒத்தி வைக்கிறாா். மூன்று மணிநேரம் கழித்து மீண்டும் சட்டசபைக் கூட எதிர்க்கட்சிக்காரா்கள் வெளியேற்றப்படுகிறாா்கள், அடுத்த அரைமணி நேரத்தில் எடப்பாடி அணி வெற்றி என்கிறாா்கள்.
                            எதிரணியான பன்னீர் அவர்களுடன் 11 MLA கள் மட்டுமே இருந்த நிலையில், அவா்கள் எதிா்த்து குரல்க் கொடுத்திருந்தாலும் இவரது அணி வெல்வதென்பது கேள்விக்குறியானதே. எதிா்கட்சியை வெளியேற்றி வெற்றி அறிவித்திருப்பது விசித்திரமான அரசியல் சூழ்ச்சியே அன்றி வேரேதும் இல்லை என்பதே உண்மை. இத்தகைய வெற்றி நீடிக்கக் கூடாதேன்பதே ஒவ்வொரு நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு. இந்த நிலையில், எதிா்க்கட்சி செய்தது சாியா? தவறா? என்ற விவாதங்கள் வேறு. சூழ்ச்சியை கையில் எடுத்து வென்றது சரி என்றால் எதிா்க்கட்சி செய்ததும் சாியே. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புக்கிறாா்கள் என்பதே சத்தியமான உண்மை.

எல்லாம் சாி, ஆனா சட்டசபையில் சட்டத்தை விட சட்டைதான் அதிகம் பேசுகிறது.


- பாஸ்கி.

5 comments:

Unknown said...

ஆளும் கட்சியின் கூவத்தூர் நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் எதிர்கட்சி செய்தது தவறில்லை. 7.5 கோடி மக்களுக்காக மேஜைகள் மைக்குகள் உடைப்பதும் தவறில்லை....

பாஸ்கி said...

அதானே

Unknown said...

Indirect vote is not fair...
That's not people's judgement it can be money management

பாஸ்கி said...
This comment has been removed by the author.
பாஸ்கி said...

Yes